கோப்பெருந்தேவி


புதுமுக இயக்குனர் ஹ்ருஷிகேஷ் அச்சுதன் ஷங்கர் இயக்குனராக அறிமுகமாகும் படம் 'கோப்பெருந்தேவி'. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாகி வரும் இப்படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி, ஊர்வசி, தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், இளவரசு, பாண்டு, சாம்ஸ், அனுமோகன், கோவை சரளா, வி.டி.வி. கணேஷ், சிங்கம்புலி, ஸ்ரீமன், மனோபாலா உள்ளிட்ட 18க்கும் மேற்பட்ட நகைச்சுவை நடிகர்கள் நடிக்கின்றனர். அடர்ந்த காட்டுக்குள் புதையல் ஒன்று இருக்கிறது. அந்தப் புதையலை பேய் ஒன்று பாதுகாக்கிறது. அதை அறியாமல் ஒரு கும்பல் புதையல் எடுக்கக் கிளம்புகிறது. பேய் பட்ட பாட்டை(!) படம் கலகலப்பாகச் சொல்கிறதாம். விரைவில் திரைக்கு வர இருக்கிறது இப்படம்.

அரவிந்த்

© TamilOnline.com