காந்த் சகோதரர்களுக்கு 'Vital Voices - Solidarity Award'
ரவிகாந்த், ரிஷிகாந்த், நிஷிகாந்த் சகோதரர்கள், 2001ம் ஆண்டு முதல் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகளுக்கு எதிராகப் போராடுவதற்கென்று 'சக்தி வாஹினி' என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். இவர்களின் சேவையைப் பாராட்டி வாஷிங்டனில் உள்ள கென்னடி அரங்கில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் 2013ம் ஆண்டுக்கான 'Vital Voices Global Leadership Award' என்னும் விருதை வழங்கினார் அமெரிக்கத் துணையதிபர் ஜோ பைடன். நிகழ்ச்சியில் பாகிஸ்தானில் பெண் கல்விக்காகப் போராடியதால் வன்முறைக்கு ஆளான சிறுமி மலாலா யூசஃப் ஸாய்க்கு 'உலக வழிகாட்டிகள் விருது' வழங்கப்பட்டது. 'சக்தி வாஹினி' அமைப்பின் தலைவரான ரவிகாந்த் உச்சநீதி மன்ற வழக்கறிஞர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கக் கடுமையான சட்டங்கள் வரவேண்டும் என்றும் இவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். Vital Voices ஹிலாரி கிளிண்டனால் 1997ல் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பாகும். அது 'சக்தி வாஹினி'யை ஒரு முன்மாதிரி அரசுசாரா சேவை அமைபபாகத் தேர்ந்தெடுத்துள்ளது. இவ்வமைப்பைப் பற்றி மேலும் அறிய: shaktivahini.org மற்றும்


© TamilOnline.com