தேவையான பொருட்கள்
அரிசிச் சாதம் - 1 கிண்ணம் மிளகாய் வற்றல் - 1 பச்சை மிளகாய் - 1 பச்சைப் பட்டாணி - சிறிதளவு தேங்காய்த் துருவல் - சிறிதளவு எண்ணெய் - சிறிதளவு கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு (உடைத்தது) - 1 தேக்கரண்டி கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப பெருங்காயப் பொடி - சிறிதளவு முந்திரி - சிறிதளவு
செய்முறை
பச்சைக் கொத்துமல்லியைச் சுத்தம் செய்து, கழுவி, வடிய வைத்துக் கொள்ளவும். பின்னர் மிக்சியில் மிளகாய் வற்றல், பச்சை மிளகாய், தேங்காய், கொத்துமல்லி எல்லாவற்றையும் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, அதில் கடுகு வெடித்தவுடன் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி இவற்றைப் பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் அரைத்த விழுது, பச்சைப் பட்டாணி, உப்பு, பெருங்காயம் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். அதில் உள்ள நீர் வற்றியவுடன் இறக்கி வைத்து விட்டு, வறுத்துவைத்த பருப்பு வகைகளைப் போட்டுக் கலந்து கொள்ளவும்.
பின்னர் அதில் கொத்துமல்லி பட்டாணிக் கலவையைச் சேர்த்துக் கலந்து பரிமாறலாம். சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குறிப்பு: சாதம் உதிர் உதிராக இருக்க வேண்டும். தொட்டுக் கொள்ள பச்சடி, அப்பளம், வடாம் வகைகள் செய்யலாம்.
பாலா சதாசிவம் |