பேரீச்சம்பழ பெகான் கேக்
நுண்ணலையில் செய்யும் முட்டையில்லாத பேரீச்சை-உலர்திராட்சை பெகான் (pecan) கேக் (microwaved eggless date-raisin pecan nut cake) செய்யும் முறையைத் தருகிறோம்.

தேவையான பொருட்கள்

உலர்திராட்சை (கிஸ்மிஸ்) - 1/8 கிண்ணம்
பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) - 7
பால் - 1 கிண்ணம்
மைதாமாவு - 1 1/4 கிண்ணம்
ஆலிவ் எண்ணெய் - 3/4 கிண்ணம்
பழுப்பு சர்க்கரை - 3/4 கிண்ணம்
சமையல் சோடா - 1 தேயிலைக்கரண்டி
பெகான் (pecan nuts) பொடியாக நறுக்கியது - 1/8 கிண்ணம்
எலுமிச்சைச் சாறு - 1/2 தேக்கரண்டி

செய்முறை

பாலைச் சூடாக்கி இதில் பழங்களை ஒரு மணி நேரம் ஊறவிடவும். பின்னர் மிக்ஸியில் இதை அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

மாவை சமையல் சோடாவுடன் கலந்து இரண்டு முறை சலிக்கவும்.

அரைத்த பழக்கலவையில் எண்ணெயை விட்டு நன்றாகக் கலக்கி இதில் சர்க்கரை, எலுமிச்சைச் சாறு, பெகான் சேர்த்துக் கலக்கவும்.

மாவைச் சிறிது சிறிதாக இதில் போட்டு மெதுவாகப் புரட்டிக் கலக்கவும்.

நுண்ணலை அவிப்பானில் உபயோகிக் கக்கூடிய ஒரு வட்ட வடிவக் கண்ணாடி பாத்திரத்தில் பாதி அளவுக்கே இருக்கும் படி இந்தக் கலவையைப் போட்டு உயர் திறனில் 9 நிமிடங்கள் பேக் (bake) செய்யவும். சற்று ஆறிய பின்னர் எடுத்து வெட்டிவைக்கவும். நுண்ண¨லை அவன் பேக் செய்ய எடுத்துக்கொள்ளும் நேரம் அதன் சக்தியைப் பொறுத்தது.

நுண்ண¨லை அவனில் கேக் செய்வது மிக எளிது. ஆனால் அதிக கவனம் அவசியம்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com