BTS: சூப்பர் மெல்லிசை
ஜூன் 9, 2013 அன்று சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியிலுள்ள பாரதி தமிழ்ச் சங்கம் தனது கலை மற்றும் சமூகப் பணிகளுக்கு நிதி திரட்டும் முகமாக, மாபெரும் இசை நிகழ்ச்சி ஒன்றை அளிக்கவிருக்கிறது. இதில் தமிழ் நாட்டின் பிரபல தொலைக்காட்சி இசைப் போட்டிகளில் வெற்றி பெற்று இப்பொழுது திரையுலகப் பின்னணிப் பாடகர்களாக வளர்ந்திருக்கும் 'ஹரியுடன் நான்' புகழ் அனுஷ் கணேஷ், காயத்ரி அருண், 'சூப்பர் சிங்கர்' புகழ் பிரகதி குருப்ரசாத், ரவி கோபிநாத், 'ராகமாலிகா' வெற்றியாளர் ஸ்ரீநாத், பிரபல திரையிசைப் பின்னணிப் பாடகி விமலா ரோஷிணி ஆகியோர் நிகழ்ச்சிக்குச் சிறப்புச் சேர்க்கிறார்கள். இவர்களுடன் பிரபல விரிகுடாப் பகுதி இசைக் கலைஞர்களும் பங்கேற்பார்கள்.

வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் ஆன்மீகச் சொற்பொழிவு, பிரபல எழுத்தாளர்களோடு உரையாடல், விழா நாட்களில் இளையோரும் வல்லுனரும் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், அன்னதானம் எனப் பல தளங்களிலும் ஆறாண்டுகளாச் சிறந்த சேவையாற்றி வரும் பாரதி தமிழ்ச் சங்கம், தனது பணிகளைத் தொடரவும், விரிவுபடுத்தவும் இதில் திரட்டப்படும் நிதி உதவும்.

நாள்: ஜூன் 9, ஞாயிற்றுக் கிழமை
நேரம்: மாலை 4 மணி முதல்
இடம்: ஸ்பாங்கென்பெர்க் அரங்கம், ஹென்றி எம் கன் பள்ளி, 780 அரஸ்ட்ரடெரோ ரோடு, பாலோ ஆல்டோ.
இணையத்தில் சீட்டு வாங்க: bharatitamilsangam.org
மின்னஞ்சல் மூலம் பதிவு செய்ய: tickets@bharatitamilsangam.org

விபரங்களுக்கு:
வாசுதேவன் நஞ்சன்கூடு: 650-868-0510
நித்யவதி சுந்தரேஷ்: 510-857-3714
முத்துகுமார் ஸ்ரீநிவாசன்: 408-373-1977
திருப்பதி பீமாஸ்: 408-829-6086

திருமலை ராஜன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com