மே 4, 2013 அன்று மாலை 3:00 மணிக்கு, நியூ இங்கிலாந்து தமிழ் சங்கம், விஜய் டிவி 'நீயா? நானா?' புகழ் கோபிநாத் அளிக்கும் 'விவாத மேடை' என்னும் நிகழ்ச்சியை, சித்திரை விழாவை முன்னிட்டு நடத்த உள்ளது. இது நியூ இங்கிலாந்தில் கோபிநாத் அவர்கள் முதன்முதலாகப் பங்குபெறும் சிறப்பு நிகழ்ச்சியாகும். விவாதத்தின் தலைப்பு: 'வெளிநாட்டில் வாழ்வதால் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?'
ஃப்ரேமிங்காம், கீப் டெக் உயர்நிலைப் பள்ளியில் நடக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியைக் குறித்து மேலும் அறியவும், நிகழ்ச்சியில் பங்கேற்கவும் பார்க்க வலைமனை: www.netamilsangam.org
பமிலா வெங்கட், பாஸ்டன், மாசசூஸட்ஸ் |