தமிழ்-ஆங்கில Toast Masters Club
பொதுமேடையில் தயக்கமின்றி பேசப் பயிற்சி அளிக்கும் சங்கம் 'Toast Masters Club'. தன் உலகளாவிய இணைக்கழகங்கள் மூலம் இச்சங்கம் பேச்சுத்திறனையும், தலைமைப் பண்பையும் ஒருங்கே வளர்த்து வருகிறது. உலகப் புகழ்பெற்ற இவ்வமைப்பு, 116 நாடுகளில் 13,500 கிளைகளும், 280,000 அங்கத்தினர்களும் கொண்டு இயங்கி வருகிறது. மாவட்ட எண் 4ல் உள்ள கிரேட்டர் பே ஏரியாவில் மட்டும் 250க்கும் மேற்பட்ட சங்கக் கிளைகள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டுள்ளன.

ஜனவரி 2013ல் 10 பேர் கொண்ட ஒரு புதிய கிளை சிலிக்கான் பள்ளத்தாக்கில், முதன்முதலாக தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் செயல்படுவதாக உருவாயிற்று. ராஜ், தலைவர் கார்த்திக் அண்ணாமலை ஆகியோருடன் ஆர்வலர்கள் கூடி இதனைத் தொடங்கினர். முதல் நான்கு கூட்டங்களிலேயே உறுப்பினர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், இன்னும் பலர் சேர்ந்தால் அதிகப் பலன் பெறலாம். இந்தக் குழு ஒவ்வொரு மாதமும் இரண்டு மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் மதுரா இந்தியன் க்விசீன் (1635 Hollenbeck Ave, Sunnyvale, CA 94087) என்னுமிடத்தில் காலை 10 மணி முதல் 11 வரை கூடுகிறது. வழிநடத்தும் டோஸ்ட் மாஸ்டர், இலக்கண வல்லுனர், நேரக் காப்பாளர், விவாதத் தலைப்பு வழங்குனர், உரை மதிப்பீட்டாளர் எனப் பல துறைகளிலும் தேர்ந்தவர்கள் கூட்டத்தின் போது உடனிருந்து பேச்சுக்கலை வளர்க்க விரும்புவோருக்கு வழி காட்டுவார்கள். இதில் பங்கேற்பதன் மூலம் பேச்சுத் திறன், தலைமைப் பண்பு ஆகியவற்றை வளர்த்துக் கொள்ளலாம்; மனமொத்த நண்பர்களைப் பெறும் வாய்ப்பு உண்டு; கழகத்தின் மாத இதழைப் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல்: கார்த்திக் அண்ணாமலை - karthick-annamalai@gmail.com

அமெரிக்காவில் உங்கள் ஊரில் தமிழ்-ஆங்கில இருமொழி டோஸ்ட் மாஸ்டர்ஸ் கிளப் நிறுவ விரும்புவோர் அணுகவும்: Atul Nayak, Lt.Governer, Marketing
District 4 Toastmasters.

மின்னஞ்சல்: LGM@D4TM.ORG

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com