கருப்பம்பட்டி


'அஞ்சாதே', 'கோ', 'முகமூடி' போன்ற படங்களில் வித்தியாசமான வேடம் ஏற்று நடித்தவர் அஜ்மல். அவர் நாயகனாக நடிக்கும் படம் கருப்பம்பட்டி. நாயகியாக அபர்ணா பாஜ்பாய் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, சேட்டன் நடிக்கின்றனர். பழனி, பாரிஸ், இத்தாலி என்று பல இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. முழுக்க முழுக்க பிரெஞ்ச் மொழியில் எடுக்கப்பட்ட அரைமணி நேரக் காட்சி இடம் பெற்றுள்ளது. "இதற்கு தமிழ் சப்-டைட்டில் எதுவும் போடப்போவதில்லை. உணர்வுபூர்வமாக எடுக்கப்பட்டுள்ள இதை விளக்க வார்த்தைகள் தேவையில்லை," என்கிறார் படத்தின் இயக்குநர் பிரபு ராஜசோழன். இவர் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

அரவிந்த்

© TamilOnline.com