சரவணப் பொய்கை


திருவள்ளுவர் கலைக்கூடம் மூலம் பல குடும்பப் பாங்கான படங்களை அளித்தவர் இயக்குநர் வி.சேகர். இவர் பல்லாண்டு இடைவெளிகளுக்குப் பிறகு இயக்கும் படம் 'சரவணப் பொய்கை'. இதில் நாயகனாக வி. சேகரின் மகன் காரல் மார்க்ஸ் நடிக்கிறார். நாயகி, அருந்ததி. "காரல் மார்க்ஸும், கருணாஸும் தியேட்டரில் வேலை செய்கிறவர்கள். காரல் மார்க்ஸ் டிக்கெட் கொடுப்பவர். கருணாஸ் டிக்கெட் கிழிப்பவர். அடிக்கடி படம் பார்க்க வரும் அருந்ததி மீது காரல் மார்க்ஸுக்குக் காதல். அருந்ததியின் அக்கா மீது கருணாஸுக்குக் காதல். அவர்கள் காதலுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கிறோம்" என்கிறார் சேகர். இது சேகரின் 18வது படமாம்.

அரவிந்த்

© TamilOnline.com