செந்தட்டி காளை செவத்த காளை


'காதல் மன்னன்', 'அமர்க்களம்' என மாறுபட்ட கதை அம்சமுள்ள படங்களைத் தந்த சரண், நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்கும் படம் செந்தட்டி காளை செவத்த காளை. முழுக்க முழுக்க திருநெல்வேலியைச் சுற்றி நடக்கும் இக்கதையில் நாயகனாக வினய் நடிக்கிறார். நாயகிகளாக சமுத்ரிகா, காதம்பரி, ஷில்பி வர்மா ஆகியோர் நடிக்கின்றனர். இசை சரணின் ஆஸ்தான இசையமைப்பாளர் பரத்வாஜ். இது பரத்வாஜின் 75வது படம். படத்தில் வினய்க்கு இரட்டை வேடம் என்பது கொசுறு தகவல். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்துமே சரண் தான். சீறிப் பாயட்டும் செவத்த காளை.

அரவிந்த்

© TamilOnline.com