யாசகன்


இயக்குநர் அமீரின் உதவியாளர் துரைவாணன் இயக்கும் படம் ‌யாசகன். இதில் மகேஷ் நாயகனாக நடிக்க, நிரஞ்சனா என்ற புதுமுகம் நாயகியாக அறிமுகமாகிறார். மதுரையின் ஒரு குடிசைப்பகுதியில் வாழும் மகேஷ் மிகவும் நல்லவன். அவனுக்கும் நிரஞ்சனாவுக்கும் காதல் வருகிறது. அது கூடவே சில பிரச்சினைகளையும் கொண்டு வருகிறது. ஊருக்கே நல்ல பிள்ளையாக இருந்தவன், ஊரே ஒதுக்கி வைக்கும் யாசகன் ஆகிறான். அவன் ஏன் அப்படி ஆனான், காதல் அப்படி என்னதான் செய்தது என்பதைச் சொல்கிறது யாசகன். காதலித்தால் சிலர் கவிஞனாக மட்டுமல்ல, யாசகனாகவும் ஆகி விடுவார்களோ?

அரவிந்த்

© TamilOnline.com