தேசிங்கு ராஜா


விமல் நாயகனாக நடிக்கும் படம் தேசிங்கு ராஜா. நாயகியாக பிந்து மாதவி நடிக்கிறார். எழில் இயக்குகிறார். முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக உருவாகிறது. "படத்தில் எம்ஜிஆர் மீது பக்தி கொண்டவராக

'இதயக்கனி' என்ற பெயரில் நடிக்கிறார் விமல். பிந்து மாதவி 'தாமரை' என்ற பெயர் கொண்ட, அடாவடியான ரஜினி ரசிகையாக நடிக்கிறார். படத்தின் ஆரம்பமே பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியைத் தரும். அதுதான் மொத்த திரைக்கதைக்குமான உயிர் நாடி" என்கிறார் எழில்.

அரவிந்த்

© TamilOnline.com