தெரியுமா?: கருடவேகா கூரியர் சேவை
சில ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கப்பட்ட 'கருடவேகா' கூரியர் சேவை பாரதத்திலிருந்து, வட அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, துபாய், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குப் பொருட்களை விரைந்து கொண்டு சேர்க்கும் நிறுவனமாகத் திகழ்கிறது. ஆந்திர மாநிலத்திலிருந்து அட்லாண்டாவுக்கு மட்டுமே எனத் தனது சேவையைத் தொடங்கியது. தற்போது தமிழ் நாடு, கர்நாடக, மத்தியப் பிரதேச மாநிலங்களில் 40 கிளைகளாக விரிவடைந்து பணியாற்றுவதுடன், மேலும் அதிகக் கிளைகளைத் தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. பிற கூரியர் சேவை நிறுவனக் கட்டணங்களை காட்டிலும் 40-50 சதவீதம் குறைவாகவே கட்டணம் (கிலோவுக்கு ரூ.500+வரி) பெற்றுக்கொண்டு, 5 நாட்களில் கொண்டு சேர்க்கும் இவர்களது சேவை பயனாளிகளின் சிறப்பு கவனத்தைப் பெற்று வருகிறது.

கருடவேகா இந்தியாவிலிருந்து மருந்துப் பொருட்கள் கொண்டுவரப் பிரத்தியேக அனுமதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அமெரிக்கா வரும் முதியோர் இதனை வரவேற்கிறார்கள். நீங்கள் தொலைபேசி/மொபைல்/மின்னஞ்சல் வழியே தெரிவித்தவுடன் அட்லாண்டா, பாஸ்டன் பெருநகரங்களில் இருப்போரிடமிருந்து பொருள்களைப் பெற்று, இந்தியாவில் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. இந்தச் சேவையை மற்றும் பல பெருநகரங்களுக்கும் விரிவாக்க உள்ளது.

புதுமனை புகுவிழா, ஆன்மீக, சமூக நிகழ்வுகள் போன்றவற்றுக்குத் தேவையான கலாசார, பூஜை மற்றும் உணவுப் பொருட்களை இந்தியாவிலிருந்து நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்புடன் விரைந்து கொண்டுவந்து சேர்க்கிறது. அமெரிக்காவிலுள்ள பலர் இந்தியாவில் தமது பெற்றோருக்கு விடமின் மாத்திரைகள், விசேட உணவுப் பொருள்கள் (உதாரணமாக, சர்க்கரை நோய் கொண்டோருக்கான பால் பவுடர்) முதலியவற்றை அனுப்பவும் கருடவேகாவைப் பயன்படுத்துகிறார்கள்.

அதுமட்டுமல்ல, கருடவேகா கூரியர் நிறுவனம் தனது வருவாயில் கணிசமான பங்கினை, ஏழை மக்கள் கல்வி, உணவு, மருத்துவ உதவி போன்ற பணிகளுக்கு அளிக்கிறது. கருடவேகா நிறுவனத்துடன் தொடர்பு கொள்ள
தொலைபேசி: 1-855-855-VEGA (8342).
வலைமனை: www.garudavega.com

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com