நவம்பர் 2006: குறுக்கெழுத்துப்புதிர்
குறுக்காக
3. கவியரசர் கண்ணம்மாவைக் காதலிப்பவனின் தாசன் (5)
6. காய்கறித் தட்டுப்பாடு ஏற்பட காலம் பொருந்தி வரும் விதம்? (4)
7. கஷ்டப்பட்டு மதுவருந்தியவள் பெற்றது (4)
8. விலங்கு இயக்குநர் கன்னையா சிப்பாய் தலைகால் வெட்டி ஒட்டினார் (6)
13. ஒரு நாட்டின் வடிவத்தைப் பிரித்துக் காட்டும் (6)
14. இடை வேலை செய்வதற்கேற்ற இடம் (4)
15. தலை சாய்த்து அரைப் பண நிதி நிறுவனத்தில் சேர் (4)
16. பறவைகள் கீச்சிடும் பொழுதில் கீழ்ப்பக்கம் சிவப்பாய் இருப்பது (2, 3)

நெடுக்காக
1. மமாமிமீ... என்றிசைக்குமோ இந்த வாத்தியம்? (3,2)
2. மைசூர் ராஜாவுக்கு முன் பணமில்லாமல் சந்தனம் இட்டு நேராகப் பார்த்தல் (5)
4. மலைமேல் வாழும் ஆயுதபாணி (4)
5. பொருத்தமான வெண்கொம்பு முனை உடைந்தது மூக்கு நுனியில் (4)
9. படி நடுவில் உனது இடை வைத்தால் தீயின் வெம்மை (3)
10. கணிதப் புத்தகத்தில் வரையப்பட்டிருக்கும் திரைப்படக் காதல் வகை (5)
11. சாவி கொடுத்த முதன்மையான சூழலில் கடைசி வீடு (5)
12. மாமரத்தில் தாக்குதல் (4)
13. செய்வதற்கு கஷ்டமில்லாத தாளின் ஓரத்தைக் கிழிப்பதா என குழப்பம் (4)

© TamilOnline.com