தக்காளி பிரியாணி
இது பேச்சிலர் (அதாங்க, கல்யாணம் ஆகாதவங்க) செய்வதற்கான அவசரடிச் சமையல் ஐட்டம். ஆற அமரச் செய்து சாப்பிட்டாலும் நல்லாத்தான் இருக்கும்.

தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி – 1 கிண்ணம்
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் (நீளவாக்கில் நறுக்கியது) - 2
லவங்கம் – 1
பட்டை - 1 அங்குலம்
சோம்பு - 2 டீஸ்பூன்
வெங்காயம் (நீளவாக்கில் நறுக்கியது) – 1/2 கிண்ணம்
தக்காளி பேஸ்ட் – 4 மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
புதினா (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு
கொத்துமல்லி (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
அரிசியைக் கழுவி 2 கிண்ணம் தண்ணீரில் 30 நிமிடம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெயைக் காய வைத்து, பச்சை மிளகாய், லவங்கம், பட்டை, சோம்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக மாறியதும் தக்காளி பேஸ்ட், இஞ்சி பூண்டு விழுது, புதினா, கொத்துமல்லி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். ஊறவைத்த அரிசி (தண்ணீருடன்) போட்டு, உப்பு கலந்து மூடவும். இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.

நித்யா நவீன்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com