தென் கலிபோர்னியா தமிழ் மன்றம்: மெல்லிசை
ஏப்ரல் 13, 2013 அன்று மாலை 4.00 மணிக்கு, தென் கலிஃபோர்னியா தமிழ் மன்றம் 'பாட வா உன் பாடலை' என்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒன்றை நடத்தவிருக்கிறார்கள். இது ஜோர்டன் ஹை ஸ்கூல், லாங் பீச், கலிஃபோர்னியா என்ற இடத்தில் நடைபெறும் அமெரிக்காவின் எந்தப் பகுதியிலும் வாழும் 5 வயது முதல் உள்ள பாடகர்கள் இதில் போட்டியிடலாம். பங்கேற்க விரும்பினால் pvupentries@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு முழு விவரத்தோடு எழுதவும்.

இந்த நிகழ்ச்சியை இர்வைனில் இயங்கி வரும் 'ஏக்தா சென்டர்' என்னும் கலை நிறுவனமும் ஆதரிக்கிறது. நிகழ்ச்சியில் பெறப்படும் லாபத்தின் ஒரு பங்கு தமிழ் நாட்டில் இயங்கிவரும் தன்னார்வச் சேவை நிறுவனங்களுக்கு வழங்கப்படும். தொடர்புகொள்ளத் தொலைபேசி: 562-653-6120; மின்னஞ்சல்: pvupentries@gmail.com

அனு ஸ்ரீராம்

© TamilOnline.com