உனக்கு 20 எனக்கு 40


அழகிய இளம் பெண்ணுக்கும் நடுத்தர வயதை கடந்த ஆணுக்கும் காதல் ஏற்பட்டால் என்ன ஆகும் என்பதைச் சொல்ல வரும் படம் 'உனக்கு 20 எனக்கு 40'. கே.பி.எஸ். அக்‌ஷய் கதை, வசனம் எழுதி இயக்கி நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக ஷாலினி, அம்ருதா அறிமுகமாகின்றனர். தன் தோழி வீட்டுக்கு அடிக்கடி வரும் கதாநாயகி மீது தோழியின் தந்தை காதல் கொள்கிறாராம். (எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குதா?) தோழியின் சகோதரனும் கதாநாயகியைக் காதலிக்கிறாராம். கதாநாயகி யாருக்குக் கிடைத்தாள், யார் காதல் வெற்றிபெற்றது? திடுக்கிடும் திருப்பங்களுடன் சொல்ல வருகிறது இந்தப் படம்.

அரவிந்த்

© TamilOnline.com