அர்ஜுனன் காதலி


'பம்பரக் கண்ணாலே' படத்தை இயக்கிய பார்த்தி பாஸ்கர் இயக்கும் படம் அர்ஜுனன் காதலி. நாயகனாக ஜெய், நாயகியாக 'பூர்ணா' நடிக்கிறார்கள். முக்கிய வேடங்களில் படப்பிடிப்பு நடக்கும் அந்தந்தப் பகுதி மக்களையே பயிற்சி கொடுத்து நடிக்க வைத்திருக்கின்றனர். 'காதல்', 'சுப்பிரமணியபுரம்' வரிசையில் இப்படமும் ஒரு யதார்த்தமான ஆனால் வெற்றிப்படமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் படத்தின் இயக்குநர். பாடல்களை வாலி எழுத, இசையமைக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா.

அரவிந்த்

© TamilOnline.com