நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ.


சத்யராஜ் - மணிவண்ணன் கூட்டணியில் உருவாகி வெற்றிபெற்ற அமைதிப் படையின் இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது 'நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ.' இப்படத்தில் சத்யராஜுடன் மணிவண்ணன், ரகு மணிவண்ணன், எம்.எஸ். பாஸ்கர், சீமான், வையாபுரி, வர்ஷா, மிருதுளா, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மணிவண்ணனின் இயக்கத்தில் உருவாகும் ஐம்பதாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சத்யராஜின் நடிப்பில் வெளிவரும் இருநூறாவது படமும் கூட. அரசியல், நகைச்சுவை கலந்து உருவாகும் இப்படத்திற்கு இசை: ஜேம்ஸ் வசந்தன்

அரவிந்த்

© TamilOnline.com