1) வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்? 1, 1, 4, 8, ...... ?
2) இரண்டு ஆட்கள், தினமும் இரண்டு மணி நேரம் வேலை செய்து இரண்டு நாட்களில் இரண்டு ஏக்கர் நிலத்தை செப்பனிடுகிறார்கள். அப்படியென்றால் நான்கு ஆட்கள், தினமும் நான்குமணி நேரம், நான்கு நாட்கள் வேலை செய்தால் எத்தனை ஏக்கர் நிலத்தைச் செப்பனிட முடியும்?
3) A, B, C என்ற மூன்று நபர்களின் வயதின் பெருக்குத் தொகை 72. அவர்களில் C-யின் வயது ஆறு வருடம் கழித்து 12 ஆகிறது. இதில் B என்பவர் குழந்தை என்றால் அவர்கள் ஒவ்வொருவரின் வயது என்ன?
4) ஒன்று விட்டு ஒன்றாக உள்ள ஐந்து வீட்டுக் கதவு இலக்கங்களின் கூட்டுத்தொகை 525 என்றால் அந்த எண்கள் எவை?
அரவிந்த்
விடைகள்1) வரிசை 12, (1 X 1 = 1) 1 3, (1 X 1 X 1 = 1) 22, (2 X 2 = 4) 2 3 (2 X 2 X 2 = 8) என்ற வசையில் அமைந்துள்ளது. இதன்படி அடுத்து வர வேண்டிய எண் = 3 ^ 2 (3 X 3 = 9), 3 ^ 3 (3 X 3 X 3 = 27) 9 மற்றும் 27 ஆகும்.
2) 2 ஆட்கள் தினமும் 2 மணி நேரம் வேலை பார்த்து 2 நாட்களில் 2 ஏக்கர் நிலத்தைச் செப்பனிடுகிறார்கள். அதுவே 4 ஆட்கள் தினமும் 4 மணி நேரம் வேலை பார்த்தால் 2 நாட்களில் 4 ஏக்கர் நிலத்தைச் செப்பனிட முடியும். 4 நாட்களில் 8 ஏக்கர் நிலத்தைச் செப்பனிட முடியும்.
3) A X B X C = 72
C-யின் வயது ஆறு வருடங்கள் கழித்து = 12; தற்போது = 12 - 6 = 6
A X B X C = 72
A X B = 72/C = 72/6 = 12
A X B = 12
A = 12
B = 1 (குழந்தை என்பதால்)
C = 6
12 X 1 X 6 = 72.
4) இதற்கு n/5 - 2 ^ 2 என்ற சூத்திரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
n = 525. 22 = 2 X 2 = 4.
525/5 = 105 - 4 = 101.
வீட்டின் கதவு எண்கள் முறையே 101, 103, 105, 107, 109. இவற்றின் கூட்டுத்தொகை = 101 + 103 + 105 + 107 + 109 = 525