ஆப்பிள் சட்னி
தேவையான பொருட்கள்
புளிப்பான ஆப்பிள் - 2
தேங்காய் (துருவியது) - 1/2 கிண்ணம்
பொட்டுக்கடலை - 3 தேக்கரண்டி
கொத்துமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 4

செய்முறை
ஆப்பிளைத் தோல் சீவி நறுக்கி, பொட்டுக்கடலை, தேங்காய், பச்சை மிளகாய், கொத்துமல்லி, உப்பு சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும். பிறகு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து உபயோகிக்கவும். இது இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி. காரம் தேவைப்பட்டால் மிளகாய் வற்றல் சேர்த்துக் கொள்ளலாம்.

தங்கம் ராமசாமி,
ப்ரிட்ஜ் வாட்டர், நியூஜெர்ஸி

© TamilOnline.com