ஆப்பிள் கொத்சு
தேவையான பொருட்கள்
புளிப்பான ஆப்பிள் - 2
துவரம் பருப்பு (அ) பயத்தம் பருப்பு (வெந்தது) - 1 கிண்ணம்
வெங்காயம் - 1 கிண்ணம்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 துண்டு
மிளகாய் - 3
கொத்துமல்லி விதை - 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
முந்திரிப் பருப்பு - 6
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - சிறிதளவு

செய்முறை
ஆப்பிளைத் தோலுடன் அல்லது தோல் சீவி நறுக்கி வேகவிடவும். உப்பும் மஞ்சள் பொடியும் போடவும். வெந்தவுடன் கடலைப்பருப்பு, மிளகாய், கொத்துமல்லி விதை (தனியா) வறுத்துப் பொடிசெய்து போட்டு வெந்த பருப்பையும் கொட்டிக் கொதிக்க வைக்கவும். பின்னர் இறக்கி கடுகு, பச்சை மிளகாய், இஞ்சி, முந்திரி, கறிவேப்பிலை தாளிக்கவும். நீர்க்க இருந்தால் சிறிது கடலை மாவு கரைத்து ஊற்றி ஒரு கொதி விடவும். இதற்குப் புளி, எலுமிச்சைச் சாறு வேண்டாம். இந்தக் கொத்சு சுவையாக இருக்கும்.

தங்கம் ராமசாமி,
ப்ரிட்ஜ் வாட்டர், நியூஜெர்ஸி

© TamilOnline.com