இதெல்லாம் புதுசு!
வெந்தயக் கீரை (மேத்தி) பக்கோடா

தேவையான பொருட்கள்
மேத்தி (தழை மட்டும்) - 1 கிண்ணம்
கடலை மாவு - 1 கிண்ணம்
அரிசி மாவு - 1/4 கிண்ணம்
மிளகாய்ப் பொடி - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
உருளைக் கிழங்கு (வேகவைத்து பொடியாய் நறுக்கியது) - 1/2 கிண்ணம்
வெங்காயம் (நறுக்கியது) - 1 கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
நெய் - 2 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 3 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை
வெந்தயக் கீரையை ஒரு பாத்திரத்தில் போட்டு (நறுக்கக் கூடாது. நறுக்கினால் கசப்பு வரும்) கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்ப் பொடி, மசாலா, உருளைக் கிழங்கு, வெங்காயம், நெய், முந்திரி, கறிவேப்பிலை, உப்பு எல்லாம் ஒன்றாகப் போட்டு கலந்து பிசையவும். தண்ணீர் தேவையானால் சிறிது ஊற்றிப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் சிறு சிறு உருண்டையாகக் கிள்ளிப் போட்டுப் பொரித்தெடுத்து தக்காளி சாஸ், தேங்காய்ச் சட்னி இவற்றுடன் சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.

தங்கம் ராமசாமி,
ப்ரிட்ஜ் வாட்டர், நியூஜெர்ஸி

© TamilOnline.com