சிகாகோ தமிழ் சங்கத்தின் புதிய செயற்குழு
சிகாகோ தமிழ் சங்கத்தின் செயற்குழு தேர்தல் சென்ற டிசம்பர் மாதம் நடை பெற்றது. சங்கத்தின் தலைவராக திரு. வீரா வேணுகோபாலும், துணைத் தலைவராக திரு. டோனி சூசையும், செயலாளராக திரு. ரகுராமனும் தேர்ந்தெடுக்கப் பட்டார் கள். சிகாகோ தமிழ் சங்கத்தை ஒரு புதிய பரிமாணத்திற்கு எடுத்துச்செல்ல, திரு. வீரா உறுதி பூண்டார். தரமான நிகழ்ச்சிகள், மக்கள் சேவை, தமிழர் மேம்பாடு, வீராவின் முக்கிய குறிக்கோளாகும்.

இதற்கு உதாரணமாக, சென்ற வாரம் நடந்த பொங்கல் விழாவைக் கூறலாம். மிகவும் தரமான நிகழ்ச்சிகளாக கலை நிகழ்ச்சிகள், நகைச்சுவை நாடகம் மற்றும் பட்டிமன்றம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 475க்கும் மேலாக மக்கள் திரளாக வந்திருந்து நிகழ்ச்சிகளை ரசித்தார்கள். மற்ற செயற்குழு உறுப்பினர்கள்: துணைச் செயலாளர்: மீனா சுபி, பொருளாளர்: ராமகிருட்டிணன், துணைப் பொருளாளர்: கிருஷ் ராமச்சந்திரன்.

தமிழ் சங்கத்தின் நிகழ்ச்சிகளை அறிய கீழ்க்கண்ட இணையத்தளத்தை காணவும். www.chicagotamilsangam.org

ஜோலியட் ரகு

© TamilOnline.com