ஜனவரி 5, 2013 அன்று நாஷ்வாவில் (நியூஹாம்ப்ஷயர்) சந்தியா ஸ்ரீதரின் ஆராதனா இசைப்பள்ளி, திருப்பாவை சேர்ந்திசை நிகழ்ச்சியை நடத்தியது. லக்ஷ்மி முனுகூர் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்துப் பேசுகையில் ஆண்டாள் அருளிய திருப்பாவையின் சிறப்புகளை விளக்கினார். பாவை நோன்புப் பாடல்களை சிவானிஷா, சாத்வி ராகவ், ரம்யா பிரபாகர் ஆகியோர் பாடினர். அடுத்து மூத்த மாணவிகள் ரோஷினி நரசிம்மன், அஞ்சனா மங்கலத் இணைந்து 'அம்பரமே தண்ணீரே' ஆகிய பாசுரங்களைப் பாடினர். தொடர்ந்து சிநேகா பிரசாத், அனன்யா வெங்கடேஷ், பூஜா பிரசாத் ஆகியோர் 'புள்ளும் சிலம்பின காண்' முதலிய பாடல்களைப் பாடினர். சுருட்டி ராகத்தில் 'வங்கக்கடல் கடைந்த' பாடலை அனைத்துச் சிறார்களும் பெரியோரும் ஒன்றாகப் பாடியது வெகு அழகு. சிறுவன் கபிலன் மிருதங்கம் வாசித்தான். இசைப்பள்ளி நிறுவனர் சந்தியா நன்றியுரை வழங்கினார்.
பூங்கோதை கோவிந்தராஜ், நாஷ்வா |