BATM: பொங்கல் விழா
ஜனவரி 19, 2013 அன்று சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் பொங்கல் விழாவை ஃப்ரீமாண்ட் நகரில் கொண்டாடியது. நகரத் துணைமேயர் அனு நடராஜன் குத்து விளக்கேற்றித் தொடங்கி வைத்து விழாமலரை வெளியிட்டார்.

அடுத்து வந்த மெல்லிசை, துள்ளலிசை, கும்மி, பரத நாட்டியம் ஆகியவை பார்த்தோரைப் பரவசப்படுத்தின. ஸ்ரீதரன் மைனர், அருண் இசைத்த உருமி, வேதா குழுவினரின் சிலம்பம், தாமு நடத்திய உறியடித்தல் போன்றவை நம் பண்பாட்டின் கூறுகளை மேடையேற்றின. கலைக்கோயில், தமிழ்ப்பூங்கா குழுவினரின் நடனங்கள், நவீன திருவிளையாடல் நாடகம், குழந்தைகளின் கும்மிப்பாட்டு, நங்கையரின் நாட்டியமெனக் கலையின் அணிவகுப்பு காணப் பெருவிருந்தாக அமைந்தது.

டெய்ஸி ஒருங்கிணைத்த கவியரங்கத்தில் உள்ளூர்க் கவிஞர்கள் பங்கேற்றுக் கவிதைகளை வழங்கினர். நிகழ்வின் படங்களுக்கும் காணொளிக்கும்

குணசேகரன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com