பாரதி தமிழ்ச் சங்கம்: பாட்டும் பரதமும்
பிப்ரவரி 16, 2013 அன்று பாரதி தமிழ்ச் சங்கம், பாட்டும் பரதமும் என்ற தமிழிசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சியை வழங்கவிருக்கிறது. வளைகுடாப் பகுதியின் பிரபல இசைக் கலைஞர்களான அஷோக் சுப்ரமணியம், ஹரி தேவநாத் இருவரும் இணைந்து தமிழ் இலக்கியப் பாடல்களுக்குப் பண் அமைத்துக் கர்நாடக இசையில் வழங்குவார்கள். அடுத்து, பிரபல நடன ஆசிரியர்களான தீபா மஹாதேவன் மற்றும் ஸ்நிக்தா வெங்கடரமணி தமது மாணவியருடன் பரதநாட்டிய நிகழ்ச்சி ஒன்றை வழங்குவார்கள். சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி குருப்ரசாத் இவ்வரங்கில் கவுரவிக்கப் படவிருக்கிறார்.

சாய் கோயில் அரங்கத்தில் (1221, கஃலிபோர்னியா சர்கிள், மில்பிடாஸ், கலிஃபோர்னியா-95035) மதியம் 2:00 மணிமுதல் நிகழ்ச்சி நடைபெறும். அனுமதி இலவசம்.

திருமலைராஜன்,
ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா.

© TamilOnline.com