சுட்டகதை


வேறொருவர் கதையைச் சுட்டு தன் கதையாக அரங்கேற்றுவது திரையுலகில் புதிதல்ல. படத்தின் தலைப்பாக அதையே சூட்டியதுதான் புதிது! புதுமுக இயக்குநர் சுபு, சிறுவயதின் ஹீரோக்களான இரும்புக்கை மாயாவி, டாக்டர் டோனி கதைகளில் வருவது போன்ற லாஜிக் இல்லாத சம்பவங்களை வைத்து, நகைச்சுவை கலந்து திரைப்படத்தை உருவாக்கி வருகிறார் சுபு. “இந்திய சட்ட திட்டங்கள் இல்லாத ஒரு கற்பனை ஊரில் இந்தக் கதை நடக்கிறது. அந்த ஊரில் அடிக்கடி கொலை நடக்கும். அந்தக் கொலைகள் ரத்தம் சிந்தி பயங்கரமாக இருக்காது. கொலையே காமெடியாகத்தான் இருக்கும். இந்த காமெடி கொலையை இரண்டு டம்மி பீஸ் கான்ஸ்டபிள்கள் கண்டுபிடிப்பதுதான் கதை,” என்கிறார் இயக்குநர். நாயக, நாயகியாக பாலாஜி, வெங்கி, லட்சுமிப்ரியா அறிமுகமாகின்றனர். முக்கிய வேடங்களில் எம்.எஸ்.பாஸ்கர், ஆர்.எஸ்.சிவாஜி, நாசர் போன்றோர் நடிக்கின்றனர். இந்தக் கதை என்னமோ தினமும் பேப்பர்ல வர்ற மாதிரி இருக்குதே.

அரவிந்த்

© TamilOnline.com