படம் பேசும்


'பை 2' என்ற வித்தியாசமான தலைப்பில் படம் தந்தவர் ராகவா. நாயகன், நாயகி என இருவர் மட்டுமே அப்படத்தில் நடித்திருந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பின் இவர் இயக்கும் திரைப்படம் 'படம் பேசும்'. பி. வாசுவின் மகன் சக்தி ஒரு கதாநாயகனாகவும், சங்கர் என்ற தெலுங்கு நடிகர் மற்றொரு கதாநாயகனாகவும் நடிக்கின்றனர். நாயகி, பூர்ணா. முக்கிய வேடங்களில் ஷாயாஜி ஷிண்டே, நிஷா கோத்தாரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமிழிலும் தெலுங்கிலும் வெளியாகவுள்ள இப்படம் பற்றி இயக்குநர் இப்போது எதுவும் பேச மாட்டாராம். ஏன் என்று கேட்டால் படத்தின் தலைப்பைச் சுட்டுகிறார். அது சரி, படம் பாடுமா!

அரவிந்த்

© TamilOnline.com