பிளேனோவில் பொங்கல் விழா
ஜனவரி 14, 2006 அன்று டெக்ஸாஸ் மாநிலம் பிளேனோவில் (Plano, Texas) ரைஸ் நடுநிலைப்பள்ளியில் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்மன்றம் பொங்கல் திருநாள் கொண்டாடியது.

"பொங்கலோ பொங்கல்" என்ற தலைப்பில் பல்வேறு நடனப் பள்ளிகளிலிருந்து வந்திருந்த மாணவிகள் வழங்கிய நடன நிகழ்ச்சிகள் அருமை. மற்றும் 'கலாச்சார இழப்பு தமிழ்நாட்டுக் குழந்தைகளிடமா? அமெரிக்காவாழ் குழந்தைகளிடமா?' என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றம் சூடாக இருந்தது.

தமிழ்மன்ற உறுப்பினர்கள் வழங்கிய கிரேஸி மோகனின் 'எவர் கிரீன் காமெடி' என்ற மேடை நாடகம் சிரிப்புச் சரவெடி தான். பொங்கல் விருந்தோடு நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

செல்லா கதிரேசன்
பிளேனோ, டெக்ஸாஸ்.

© TamilOnline.com