ஜனவரி 14, 2006 அன்று வளைகுடாப் பகுதித் தமிழ்க் கிறிஸ்தவர்கள் பொங்கல் விழாவைக் கொண்டாடினர். பண்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு, இயலுமாயின் அதை இறைப்பணியிலும் ஏற்று மதிப்பது கிறிஸ்தவம். தமிழ்க் கிறிஸ்தவ சமூகம் மவுன்ட்டன் வியூ புனித வளனார் ஆலய வளாகத்தில் கொண்டாடிய பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக சான் ஹொசே ஆயர் அருள்திரு பேட்ரிக் மெக்கிராத் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
புத்தம் புதிய வாழை மற்றும் கரும்புச் சோலைகள் நிரம்பிய ஆலயத்தில் தமிழ்த் திருப்பலியுடன் ஆரம்பித்த விழா, பாரம்பரிய மிக்க தமிழ் கலாச்சார வரவேற்பு, கோலங்களின் எழில் கோலம் எனத் தொடர்ந்தது. பின்னர் இடம்பெற்ற தமிழகக் கலாசாரத்தின் மகிமையை எடுத்துரைக்கும் கலைநிகழ்சிகள் அறுசுவைப் பொங்கல் பகிர்வுடன் நிறைவுபெற்றன.
'இனிய தமிழால் இறைவனில் இணை வோம்' என்ற வாக்கோடு ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை மாலை 6:45க்கு தமிழ் திருப்பலி மூலம் இணையும் வளை குடாப் பகுதித் தமிழ்க் கிறிஸ்தவர் சமூகம் ஏற்பாடு செய்திருந்தது.
மேலும் விவரங்களுக்கு: www.TamilCatholic.org சுந்தர் வின்சென்ட், தலைவர், வளைகுடாப் பகுதி தமிழ்க் கிறிஸ்தவர் சமூகம் |