ஜவ்வரிசி தயிர் பாத்
தேவையான பொருட்கள்
ஜவ்வரிசி - 1 கிண்ணம்
அவல் - 1/2 கிண்ணம்
தயிர் - 2 கிண்ணம்
பச்சை மிளகாய் - 2
மோர் மிளகாய் - 4
பெருங்காயம் - சிறிதளவு
பால் - 1/2 கிண்ணம்
கடுகு - 1 தேக்கரண்டி
திராட்சை - 1/4 கிண்ணம்
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை
ஜவ்வரிசி, அவல் இரண்டையும் வாணலியில் வாசனை வர வறுத்துக்கொள்ளவும். 4 கிண்ணம் தண்ணீர் விட்டு குக்கரில் வேக விடவும். தயிரில் கடுகு, பெருங்காயம், மோர், பச்சை மிளகாய் தாளித்து மோர் மிளகாய் நன்கு வறுத்துப் போடவும். கறிவேப்பிலையும், உப்பும் சேர்த்து திராட்சையை இரண்டிரண்டாய் நறுக்கிப் போட்டு ஜவ்வரிசி, அவல் இரண்டையும் போட்டுக் கலந்து பாலை ஊற்றிச் சாப்பிடலாம். இது சுவையாக பகாளாபாத் மாதிரி இருக்கும். உடம்புக்கு நல்லது. ஜவ்வரிசி, அவலை நன்றாக ஆறிய பின் தயிரில் போடவும். இதற்கு மாங்காய்த் தொக்கு, கொத்துமல்லித் துவையல் தொட்டுக் கொள்ளச் சுவையாக இருக்கும்.

தங்கம் ராமசாமி,
ப்ரிட்ஜ் வாட்டர், நியூஜெர்ஸி

© TamilOnline.com