ஜவ்வரிசி கிச்சடி
தேவையான பொருட்கள்
ஜவ்வரிசி - 1 கிண்ணம்
வேர்க்கடலை (தோல் நீக்கியது) - 1/2 கிண்ணம்
பச்சை மிளகாய் - 3
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1 கிண்ணம்
உருளைக் கிழங்கு (வேகவைத்து நறுக்கியது) - 1/2 கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - 1 தேக்கரண்டி
எண்ணெய், நெய் கலந்தது - 3 தேக்கரண்டி

செய்முறை
ஜவ்வரிசியை நான்கு மணி நேரமாவது ஊற வைக்கவும். சிறிய ஜவ்வரிசிதான் செய்ய வேண்டும். நிலக்கடலையைச் சிவக்க வறுத்துப் பொடி செய்து வைத்து வாணலியில் நெய், எண்ணெய் விட்டுக் கடுகு வெடிக்க விட்டு பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும். இதில் உருளைக்கிழங்கு போட்டு, உப்பு, ஜவ்வரிசி சேர்த்து ஒரு தட்டால் மூடி வைக்கவும். ஜவ்வரிசி நன்றாக வெந்ததும் வேர்க்கடலைப் பொடியைத் தூவி கறிவேப்பிலையை போட்டு எடுத்துச் சாப்பிடலாம். மஹாராஷ்டிராவில் இந்த (சாபுதானா) கிச்சடி மிகப் பிரபலமானது. விரத நாட்களில் வெங்காயமில்லாமல் செய்து சாப்பிடுவார்கள்.

தங்கம் ராமசாமி,
ப்ரிட்ஜ் வாட்டர், நியூஜெர்ஸி

© TamilOnline.com