மேரியட்டா தமிழ்ப் பள்ளி தீபாவளி
நவம்பர் 18, 2012 அன்று ஜார்ஜியாவிலுள்ள மேரியட்டா தமிழ்ப்பள்ளியில் தீபாவளித் திருநாள் கொண்டாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. முதல்வர் முரளிதரன் சுந்தரேசன் வரவேற்றுப் பேசினார். அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கத் தலைவர் தங்கமணி பால்ச்சாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். குழந்தைகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளை தீபா ஸ்ரீராம், ஸ்ரீதேவி கண்ணன் இருவரும் தயாரித்துத் தொகுத்து வழங்கினார்கள். குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தேசிய கீதத்துடன் பள்ளியின் தீபாவளிக் கொண்டாட்டம் முடிவடைந்தது.

டாக்டர் உமா பாபா,
மேரியட்டா, ஜார்ஜியா

© TamilOnline.com