ஜனவரி 12, 2013 அன்று FUN MuzikLovers, RiffsnRaagas, TREAT, சங்கமம், டாலஸைச் சேர்ந்த பிரபு, ஸ்ருதி பிரபு ஆகியோர் இணைந்து வழங்கும் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெறும். இதை தென்கலிஃபோர்னியா தமிழ் அமைப்பு (Socaltamil.org) ஏற்பாடு செய்துள்ளது. இது ஜார்டன் ஹைஸ்கூலில் (Jordan High School Auditorium, 6500 Atlantic Av, Long Beach, CA 90805) நடைபெறும் தமிழ்ச் சமூகத்தினர் பங்கேற்கும் வகையில் சமூக சேவை மட்டுமல்லாமல் விழாக்களையும் நடத்தித் தருகின்றது தென்கலிஃபோர்னிய தமிழ் அமைப்பு. லாஸ் ஏஞ்சலஸ், ஆரஞ்ச் கவுண்டி பகுதிகளில் வாழும் தமிழரிடையே ஒரு வலைக்கட்டமைப்பு ஏற்படுத்தித் தருவதுடன், குழந்தைகள் நமது கலாசாரம், பண்பாடு, திருவிழாக்கள் பற்றி அறியவும், திறமைகளை வெளிப்படுத்தவும், தமிழ் கற்கவும் வாய்ப்பு வழங்குகிறது.
35 ஆண்டுகளாகச் சேவை செய்துவரும் சென்னை சங்கர நேத்ராலாயாவின் சேவைகளில் தினந்தோறும் வெளி நோயாளிகள் பிரிவில் சுமார் 50 சதவீதமும், அறுவை சிகிச்சைகளில் 40 சதவீதமும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. அமெரிக்காவில் செயல்படும் சங்கர நேத்ராலயா ஓம் டிரஸ்ட் மூலம் 2007 முதல் 2011 வரை 14914 சிறிய அறுவை சிகிச்சைகளும், 5050 பெரிய அறுவை சிகிச்சைகளும் ஏழைகளுக்கு இலவசமாகச் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சங்கர நேத்ராலயா ஆப்தால்மிக் மிஷன் ட்ரஸ்ட் மூலம் உங்கள் நன்கொடையை வழங்கலாம். அனைத்து நன்கொடைகளுக்கும் அமெரிக்காவில் 100% வரி விலக்கு உண்டு. (100% Tax Exempted in US, IRS Registered 501 (c) (3).) Tax Exempt ID No. 52-1611548)
மேலும் விவரங்களுக்கு: எஸ்.வி. ஆச்சார்யா - தொலைபேசி: 301.251.0378; மின்னஞ்சல்: acharya@omtrust.org. வலையகம் - www.omtrust.org
சீட்டுகள் வாங்க: www.socaltamil.org www.omtrust.org
தொடர்புக்கு: Balaji T: 310.567.2468; வெங்கட்: 310.213.7342; சுப்பு: 714.613.3257; பாலா: 714.588.0602; பாலு பாலசுப்ரமணியன்: 805.630.6432; ஷங்கர் 805.432.4894; சந்தானம் முள்ளூர்: 214.893.3043.
செய்திக் குறிப்பிலிருந்து |