சித்தன்


அங்காடித்தெரு படத்தில் நடித்த மகேஷ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாயகனாக நடிக்கும் படம் சித்தன். புதுமுகம் நிரஞ்சனா கதாநாயகி. துரைவாணன் இயக்குகிறார். இவர் அமீரிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்தவர். குடிசைப்பகுதியில் வாழும் மகேஷுக்கும் நிரஞ்சனாவிற்கும் காதல். ஊருக்கு உதவும் மகேஷை ஒருகட்டத்தில் ஊரே வெறுத்து ஒதுக்குகிறது. சித்தன்போல் திரிகிறான் மகேஷ். ஆனால் நிரஞ்சனா மட்டும் கடைசிவரை அவனை நேசிக்கிறாள். அவனை ஊர் வெறுக்க என்ன காரணம்? எப்படி மீண்டு வருகிறான்? 'சித்தன்' பதில் சொல்வான். இசை: சதீஷ் சக்ரவர்த்தி.

அரவிந்த்

© TamilOnline.com