எட்டு வயது விக்னேஷ் பிரணவ் கென்டக்கியின் லூயிவில்லில் மூன்றாவது கிரேடு படிக்கிறார். அமெரிக்காவின் செஸ் கூட்டமைப்பு (UCSF) நடத்தும் பள்ளிகளுக்கு இடையிலான செஸ் போட்டிகளில் வெற்றி பெற்று நான்கு கேடயங்களைக் கைப்பற்றியுள்ளார். படிப்பிலும் முதல்தான். அவர் பயிலும் மிடில்டௌன் தொடக்கப் பள்ளியில் கணிதம், அறிவியலுக்கான 'ஸ்டடி ஐலண்ட்' ஆன்லைன் தேர்வுகளில் இவரது கிரேடிலுள்ள மாணவர்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அண்மையில் WLKY News சேனலின் நடாஷா காலின்ஸ் இவரைப் பேட்டி கண்டார். வளர்ந்த பின் சச்சினைப் போல இந்தியாவுக்காகக் கிரிக்கெட் விளையாடுவதைத் தன் கனவாக வைத்துள்ளார். லிட்டில் மாஸ்டருக்குத் தென்றலின் வாழ்த்துக்கள்!
விஜயலட்சுமி ராஜா, ஹூஸ்டன், டெக்சாஸ் |