தென்றல் குறுக்கெழுத்துப் புதிர்
தென்றலின் இரண்டாவது இதழிலிருந்தே தொடர்ந்து வெளியாகி, தனக்கென்று பல வாசகர்களைப் பெற்ற அம்சம் டாக்டர். வாஞ்சிநாதன் மிகத் திறம்படப் படைத்து வந்த குறுக்கெழுத்துப் புதிர். "மனிதன் வாழ இது தேவை - (அ) பணம் (ஆ) குணம் என்பது போன்ற புதிர்களால் நிரம்பிய தமிழ் இதழ் உலகில் அறிவுக்கு விருந்தாகவும், சிந்திக்கும் திறனுக்குச் சவாலாகவும் இருந்த அதே சமயத்தில் ஓரளவு நல்ல தமிழறிவு இல்லாமல் தீர்வு காண முடியாது என்ற அளவுக்குச் சிறப்பாக இருந்தது தென்றல் புதிர். தென்றலின் ஜனவரி, பிப்ரவரி 2004 இதழ்களில் அவர் குறுக்கெழுத்துப் புதிர்களின் நுணுக்கங்கள் குறித்து 'புதிரின் புதுமுகத்தை விளக்க ஓர் அறிமுகம்' என்ற தலைப்பில் எழுதியவை (பார்க்க: http://www.tamilonline.com/thendral/Puthirhelp.aspx) படித்து மகிழத் தக்கவை.

தனிப்பட்ட காரணங்களால் தம்மால் குறுக்குப் புதிரைத் தொடர முடியவில்லை என்று வாஞ்சிநாதன் நமக்குத் தெரிவித்துள்ளார். "மாதத் தொடக்கத்தில் எனக்கு வந்து குவியும் வாசகர் கடிதங்கள் இனி இல்லாது போகும் என்ற வருத்தம் எனக்கு உண்டு" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இதழிலிருந்து தென்றல் குறுக்கெழுக்குத்துப் புதிர்கள் மறு அறிவிப்புவரை வெளிவர மாட்டா. வாசகர்களின் ஆதரவுக்கு நன்றி.

தென்றல் ஆசிரியர் குழு

டிசம்பர் 2012 விடைகள்

© TamilOnline.com