தேவையான பொருட்கள் தேங்காய்த்துருவல் - 1 கிண்ணம் கடலைப்பருப்பு - 1/4 கிண்ணம் முந்திரிப் பருப்பு - 1/4 கிண்ணம் வெல்லம் - 1 1/2 கிண்ணம் பால் - 1/2 கிண்ணம் ஏலப்பொடி - 1 தேக்கரண்டி நெய் - 1 மேசைக்கரண்டி
செய்முறை தேங்காயை நைசாக அரைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து மிக்சியில் அரைத்துச் சலித்து வைக்கவும். முந்திரியைச் சிவக்க வறுத்துப் பொடியாக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பாலை விட்டு அரைத்த தேங்காய், முந்திரிப் பொடி போட்டுக் கிளறி வெல்லம் சேர்க்கவும். நன்றாகச் சேர்ந்து கொதிக்கும்போது, நெய்விட்டுச் சுருளக் கிளறி ஏலப்பொடி போட்டு இறக்கி வைத்தால் திரட்டுப் பால் தயார். பாலுக்கு பதில் கண்டென்ஸ்ட் மில்க் போட்டும் செய்யலாம். சுவை தூக்கலாக இருக்கும். பால் போதாவிட்டால் மேலும் அரைக் கிண்ணம் விட்டுச் செய்யவும்.
தங்கம் ராமசாமி, பிரிட்ஜ்வாட்டர், கலிஃபோர்னியா |