ஐயப்ப சமாஜம்: மண்டல பூஜை
அக்டோபர் 27, 2012 அன்று தொடங்கி வளைகுடாப் பகுதி ஐயப்ப சமாஜத்தின் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை ஆரம்பமாகிவிட்டன. முதலாவதாக சனாதன தர்ம கேந்திராவில் லட்சார்ச்சனை நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். இதில் ஸ்ரீஜா என்கிற 4 வயதுக் குழந்தை மாலை அணிந்து பக்தி சிரத்தையுடன் வணங்கியது. அடுத்தடுத்த வாரங்களில் ஃப்ரீமான்ட், கன்கார்ட், கேம்பெல் போன்ற இடங்களில் நடந்த பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர்.

டிசம்பர் 8 அன்று கேம்பெல் சித்தி விநாயகர் ஆலயத்தில் ஐயப்ப சஹஸ்ரநாம பூஜை நடைபெறும். 15ம் தேதியன்று மஹா காளேஸ்வர் கோவிலில் ஐயப்ப பஜனை நடைபெறும். டிசம்பர் 22 அன்று கன்கார்ட் முருகன் கோவிலில் குழந்தைகளுக்கான மாலை தாரணமும் இருமுடி பூஜையும் நடக்க உள்ளன.

இப்பூஜையில் பக்தர்கள் இருமுடி கட்டுதல், சங்கல்பம், அர்ச்சனை, மங்கள ஆர்த்தி மற்றும் அன்னதானத்தில் ஈடுபடுவர்.

மேலும் தகவலுக்கு:
மின்னஞ்சல் - Info@ayyappasamaaj.org
வலைத்தளம் - www.ayyappasamaaj.org

தொலைபேசி
சமாஜம் - 484.727.8424
பிரசாத் ராமகிருஷ்ணன் - 408.705.8172
மனோஜ் எம்பிரான்திரி - 408.256.2778

பிரபு வெங்கடேஷ்

© TamilOnline.com