நவம்பர் 3, 2012 அன்று தென் கலிஃபோர்னியா தமிழ்ச் சங்கதினர், லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 'லாங் பீச்' என்ற இடத்திலுள்ள 'ஜோடான் உயர்நிலைப் பள்ளியில் தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாடினர். பெண்கள் அனைவரும் புடவை, நெற்றிப் பொட்டோடு இருக்க, ஆண்களில் பலர் வேட்டி, சட்டை, திருநீறு குங்குமத்தோடு காட்சி தந்தனர். பெண் குழந்தைகள் பட்டுப்பாவாடை, சட்டையோடு பவனி வந்தனர். எல்லோரும் தமிழில் பேசியது “இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே” என்ற உணர்வை ஏற்படுத்தியது. அதைவிட நிறைவானது என்னவென்றால், சங்கத்தினர் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, பொங்கல் என்று பண்டிகைகளை மட்டும் கொண்டாடாமல் இங்குள்ள இந்தியக் குடும்பக் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லித் தருகின்றனர். இதில் வரும் தொகையைத் திரட்டி இந்தியாவில் உள்ள ஆதரவற்ற சிறுவர்களுக்கு உணவு, உடை, கல்வி போன்றவற்றிற்குச் செலவு செய்கின்றனர். ஆகவே பண்டிகைக் கால மகிழ்ச்சி பல மடங்காகிறது.
குருபிரியா |