GATS: தீபாவளி கொண்டாட்டம்
நவம்பர் 10, 2012 அன்று அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் தீபாவளித் திருவிழாவை ஜார்ஜியா டெக்கின் ராபர்ட் பெர்ஸ்ட் அரங்கத்தில் கொண்டாடியது. 900க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்தன கலை நிகழ்ச்சிகள். சங்கத் தலைவர் தங்கமணி பால்ச்சாமி தலைமையிலான 2012 செயற்குழு கௌரவிக்கப் பட்டது. சங்கத்தின் ஆண்டு மலரையும் அவர் வெளியிட்டார். கலைநிகழ்ச்சிகளைத் தொடர்ந்து 'கேட்ஸ் சூப்பர் சிங்கர்' இறுதிப் போட்டிகள் நடந்தன. பிரபலத் திரைப்படப் பின்னணிப் பாடகர்களான மஹதி, ஹரீஷ் ராகவேந்திரா, விஜய் டிவி புகழ் சத்யபிரகாஷ் மூவரும் நடுவர்களாக இருந்தனர். பின்னர், சஹானா ட்ரீம்ஸ் குழுவினருடன் இணைந்து மூவரும் இசை மழை பொழிந்தனர். தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தது.

சதீஷ் பாலசுப்ரமணி,
அட்லாண்டா

© TamilOnline.com