பாரதி தமிழ்ச் சங்கம்: தீபாவளி
நவம்பர் 10, 2012 அன்று ஜெயின் கோயில் அரங்கத்தில் பாரதி தமிழ்ச் சங்கம் தீபாவளி விழாவைக் கொண்டாடியது. இதில் 110 குழந்தைகளின் கலை நிகழ்ச்ச்சிகள், இசை, சிறப்பு பட்டிமன்றம் ஆகியவை இடம்பெற்றன.

லதா மோகன்பாபுவின் சிஷ்யர்கள் பாடிய கடவுள் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. ஸ்ரீ பாதுகா அகடமி மற்றும் குரு சுதாங்கியின் மாணவர்கள் கர்நாடக இசைப் பாடல்கள் வழங்கினர். லக்ஷ்மண் கோபி மாணவர்களின் மிருதங்கம், விஷாலின் சாக்ஸஃபோன், ராஜலஷ்மியின் வீணை, வாணி முத்தையாவின் வாய்ப்பாட்டு, வித்யா வெங்கடேஷ் மற்றும் தீபா மகாதேவனின் மாணவிகளின் பரதம் ஆகியவை அருமையாக இருந்தன.

இந்திய நாட்டுப்புறக் கலைகள் வரிசையில் சுகி சிவாவின் வாள், கம்புச்சண்டை, தப்பட்டையுடன் நடனமும், வேதாவின் மாணவர்கள் ஆடிய சிலம்பாட்டம், ஹரிப்ரியா குழுவினரின் கரகம், காவடி, பூரணியின் பொய்க்கால் குதிரை ஆகியவை மனதைக் கவர்ந்தன. திரைப்பாடல் வரிசையில் நடன அமைப்பாளர்கள் அஜீதா, சுகி சிவா, சுந்தரி, மைதிலி, கௌரி, அகிலா நரைன், லக்ஷ்மி, ஷர்மிளா, ஹரிப்ரியா சுந்தரேஷ், சஞ்சனா ஆகியோரின் நடனங்கள் இடம்பெற்றன. ஸ்னிக்தா ரமணி, காயத்ரி அருண், சாம்பசிவம், ஸ்ருதி கதிரேசன், ஸ்ருதி அரவிந்தன், ஸ்ரேயாஸ் ஸ்ரீநிவாசன், அருண் விஸ்வநாதன், குமார் ஆகியோர் திரைப்பாடல்கள் பாடினர். நவீன் குழுவினர், அஜீத்தா, ரயனின் நடனங்கள் அருமை.

சொல்லின் செல்வி உமையாள் முத்து தலைமையில் 'வாழ்வில் மகிழ்ச்சி அதிகம் தந்தது வளர்ந்த நாடா? வாழும் நாடா?' என்கிற தலைப்பிலான பட்டிமன்றத்தில், வளர்ந்த நாடே என்று வாதிட்டவர்கள் சுகி சிவா, நித்யவதி சுந்தரேஷ், கோபால் குமரப்பன் ஆகியோர். வாழும் நாடே எனப் பேசினர் சாந்தி சாம்பசிவம், நாச்சம்மை, பத்மனாபன். நடுவர் உமையாள் முத்து 'வாழும் நாடே' என்று தீர்ப்பளித்தார்.

நிகழ்ச்சிகளை அஜீதா, நரேஷ், உஷா அரவிந்தன், பாலாஜி ராமனுஜம் ஆகியோர் தொகுத்து வழங்கினர். கலந்துக் கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நித்யவதி சுந்தரேஷ்

© TamilOnline.com