ருத்ராவதி


நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'சந்தியா' தமிழில் கதாநாயகியாக நடிக்கும் படம் ருத்ராவதி. சந்தியா நடித்து மலையாளத்தில் வெளியான 'சஹஸ்ரம்' தான் தமிழில் 'ருத்ராவதி' ஆக ரீமேக் ஆகிறது. இதில் சுரேஷ்கோபி, பாலா, இந்திரா கோபாலசாமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். திடீர் திடீரென போலீஸ் அதிகாரிகள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் படுகொலை செய்யப்படுகின்றனர். காவல்துறை விசாரிப்பில் அவர்களைக் கொலை செய்வது ஒரு பெண் எனத் தெரிகிறது. யார் அந்தப் பெண், ஏன் கொலை செய்கிறாள் என்பதை த்ரில் + திகில் + அமானுஷ்யம் கலந்து சொல்ல வருகிறது 'ருத்ராவதி.'

அரவிந்த்

© TamilOnline.com