மரியான்


'வந்தேமாதரம்' ஆல்பத்தைத் தயாரித்த பரத்பாலா இயக்கும் படம் மரியான். இதில் தனுஷ் நாயகன். பார்வதி மேனன் கதாநாயகி. படத்தில் தனுஷ் மீனவராக நடிக்கிறார். இதற்காகத் தனது கெட்டப்பை அவர் மாற்றி இருப்பதுடன், மீனவர்கள் பேசும் சென்னைத் தமிழையும் பேசி நடித்து வருகிறார். ம‌ரியான் என்றால் மரணமே இல்லாதவன் என்பது பொருளாம். சரிதான். படத்திற்கு இசை, வேறு யார் ஏ.ஆர். ரஹ்மான்தான். அவரே ஒரு பாடலும் பாடியிருக்கிறார் என்பது கொசுறு தகவல்.

அரவிந்த்

© TamilOnline.com