பாரதி
வானம்
வறுமையுற்றுச் சூனியமாய்ப்
பசித்துக் கிடந்தபோது
உன் இலக்கியமெனும்
சூரியக் கோளம்
உதயமானது

நீ...
நெருப்பின் சிலிர்ப்பு
நெடுந்துயிலின் கண் விழிப்பு
புளியேப்பக்காரனின்
தொந்தியைத் தடவிக் கொடுக்கும்
கூலி எழுத்துக்களை
குப்புறத்தள்ளியது உன் பாட்டு

புல்லுக்குக் கூட பீரங்கியின்
வலிமையைக் கொடுத்தவன் நீ

வறண்ட நிலத்துக்கு மழையே!
வயலில் அசையும் பயிரே!

உண்ணத் தெவிட்டாத அமுதமே
உச்சி மீது தமிழை ஏற்றி நீ
உலகெங்கும் ஒளிரச் செய்தாய்...

வாழ்க நீ தமிழா!
வாழ்க நீ தமிழாய்!

இரவீந்திர பாரதி,
சிடார் ராபிட்ஸ், அயோவா

© TamilOnline.com