கணிதப் புதிர்கள்
1. ராமனும் லட்சுமணனும் ஒரே பெற்றோருக்கு ஒரே வருடத்தில், ஒரே மாதத்தில், ஒரே தேதியில் பிறந்தவர்கள். ஆனால் அவர்கள் இரட்டையர்கள் அல்ல. இது சாத்தியமா?

2. ஒரு குளத்தில் சில தாமரை மலர்கள் இருந்தன. அவற்றை நோக்கிச் சில வண்டுகள் வந்தன. 1 பூவுக்கு 1 வண்டு என அமர்ந்தால் 4 வண்டுகள் மலர் கிடைக்காமல் மீதம் இருந்தன. 1 பூவுக்கு 2 வண்டுகளாய் அமர்ந்தபோது 4 மலர்கள் மிச்சம் இருந்தன என்றால், வண்டுகள் எத்தனை? மலர்கள் எத்தனை?

3. சங்கர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்றுச் சில பதக்கங்களை வாங்கி வந்தான். அவன் தந்தை அதற்குப் பரிசாக முதல் பதக்கத்திற்கு 1 டாலரும், 2வது பதக்கத்திற்கு 3 டாலரும், 3வது பதக்கத்திற்கு 9 டாலரும் என தொடர்ந்து மூன்றின் மடங்குகளாகக் கொடுத்தார். சங்கர் தன்னுடைய பதக்கங்களுக்காக மொத்தம் 242 டாலர்களைப் பெற்றுக் கொண்டான் என்றால், வாங்கிய பதக்கங்களின் எண்ணிக்கை என்ன?

4. 105263157894736842 என்ற எண்ணை இதே எண்ணோடு கூட்டினால் என்ன விடை வருகிறது?

5. ராதாவின் வயதையும் அவள் தங்கை சீதாவின் வயதையும் கூட்டினால் வரும் தொகை 30. ராதா வயதின் இரண்டடுக்கையும் சீதா வயதின் இரண்டடுக்கையும் கூட்டினால் 468 வருகிறது. ராதாவின் வயதைவிடச் சீதாவின் வயது ஆறு வருடம் குறைவு என்றால் ராதாவின் வயது என்ன, சீதாவின் வயது என்ன?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com