சிவந்த பூரி
தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 1
கோதுமை மாவு - 2 கிண்ணம்
நெய் (அ) எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
ரவை - 2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க

செய்முறை:
பீட்ரூட்டை நன்றாகக் கழுவி, தோல் சீவி கொப்பரைத் துருவியில் துருவி அல்லது பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கிக் கொள்ளவும். இதை மிக்சியில் நைசாக அரைத்து, கோதுமை மாவு, ரவை, நெய்/எண்ணெய் சேர்த்து உப்புப் போட்டுப் பிசைந்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு பூரியாக இட்டுப் பொரிக்கவும். இதுவும் மிகவும் சுவையாக இருக்கும். காரட்டைச் சேர்த்தும் இதேபோல் செய்யலாம். பார்ட்டிக்கு இது மாதிரி கலர் பூரிகள் செய்தால் கண்ணைக் கவரும். சாப்பிடும்போது செய்து பொரித்தால் மிகவும் மொறுமொறுப்பாக இருக்கும்.

தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ்வாட்டர், கலிபோர்னியா

© TamilOnline.com