கடந்த சில வருடங்களாகப் பெண் சிசுக் கொலைபற்றிப் பத்திரிகைகளும், பல்வேறு அமைப்புகளும் பேசாத நாளே இல்லை. இப்போது ஒரு தமிழ்ப்படம் முதன் முதலாக ஆண் சிசுச் கொலையைப் பற்றிப் பேச வருகிறது.
'வெடக்கோழி' என்கிற பெயரில் உருவாகும் இப்படத்தை, சின்னத்திரையில் பல மெகா தொடர்களை இயக்கிய அரிராஜன் இயக்குகிறார். புதுமுகம் விமல் கதாநாயகன். மாளவிகா, சுவாதி, மும்தாஜ் என்று மூன்று நாயகிகள் நடிக்கிறார்கள்.
மும்பை சிகப்புவிளக்குப் பகுதியில் விலைமாது ஒருத்திக்கு ஆண் குழந்தை பிறக்க, அக்குழந்தையைக் கொன்றுவிட முடிவு செய்கிறாள். எப்படியோ அந்தக் கொலையிலிருந்து காப்பாற்றப் படும் அந்தச் சிறுவனின் மனரீதியான பாதிப்புகளையும், அச்சிறுவன் வாலிபன் ஆனபிறகு அவனது நிலைமையையும் சித்தரிக்கிறது 'வெடக்கோழி'.
கேடிஸ்ரீ |