ஆல்ஃபரெட்டா: தமிழ்ப் பள்ளி துவக்கம்
ஆகஸ்ட் 19, 2012 அன்று, GATS ஆல்ஃபரெட்டா தமிழ்ப் பள்ளியின் 2012-13 கல்வி ஆண்டின் துவக்க நிகழ்ச்சி நடந்தது. தமிழ்த் தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் தலைமையாசிரியை சுந்தரி குமார் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து, உதவித் தலைமையாசிரியர் ராஜா வேணுகோபால், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களின் சேவை பற்றி விளக்கி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் ராஜி முத்து சுதந்திர தினம் பற்றிக் குழந்தைகளுக்கு விளக்கினார். தியாகிகளை நினைவுகூரும் வகையில் ஒரு நிமிட மௌனம் அனுசரிக்கப்பட்டது. கடந்த கல்வியாண்டை விட 35 சதவீதம் புதிய மாணவர்கள் இந்த வருடம் பள்ளியில் சேர்ந்துள்ளனர். தற்போது 300 குழந்தைகள் தமிழ்க் கல்வி பயில்கின்றனர். 75 ஆசிரியர்கள், தன்னார்வர்த் தொண்டர்கள் சேவை செய்கின்றனர். தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.

ராஜி முத்து,
ஆல்ஃபரெட்டா

© TamilOnline.com